

தைப்பிங், டிச. 11: இங்குள்ள அலகார் தோட்டத்தில் வசிக்கும் ஆனந்தாவிற்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இதனை பேராக் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியும், புக்கிட் கந்தாங் அம்னோ தொகுதித்தலைவரான முகமட் சோலேஹான் முகமட் தாஜி எடுத்து வழங்கினார்.
அத்துடன், பாகான் செராய் தொகுதித்தலைவர் ராகவன் தலைமையில் வறுமையிலுள்ள ஓர் இந்திய குடும்பத்திற்கு சமையல் பொருட்களும், நிதியுதவியும் வழங்கப்பட்டது என்று பேராக் ஐ பி எப் தலைவர் வி.மாணிக்கம் கூறினார்.

வறுமையான குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதநேய உதவிகள் செய்ய ஐ பி எப் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இம்மாதிரியான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்

