தாய்லாந்து சீ போட்டியில் சாந்தி பெரேரா தங்கம் வென்றார்

பேங்காக், டிச 12-
தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூரின் தங்க மகள் சாந்தி பெரேரா, பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்.

29 வயது சாந்தி பெரேரா, 11.37 வினாடியில் ஓடி முடித்து தங்கம் வென்றார்.

தாய்லாந்தின் கானோன்டா ஜிராபாத் (11.54) இரண்டாம் இடத்திலும் வியட்னாமின் ஹா தி து (11.58) மூன்றாம் நிலையிலும் வந்தனர்.

2023ஆம் ஆண்டு தென்கிழக்காசியப் போட்டிகளில் அவர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றபோது எடுத்துக்கொண்ட நேரம் 11.41 வினாடி. அதே போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் சாந்தி பெரெரா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தாய்லாந்தின் பூரிப்போன் பூன்சோன் வாகை சூடினார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 10.00 வினாடி. இந்தோனீசியாவின் லாலு ஸோரி (10.25) இரண்டாம் நிலையில் வந்தார். மலேசியாவின் டேனி‌‌ஷ் இஃப்திகார் ரோஸ்லீ (10.26) மூன்றாம் இடத்தைப் பிடித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles