
பத்து காஜா, டிச 12-
இந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் கல்வி தொடர்பான பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளேன்.
தேசிய கல்வியின் வளர்ச்சியில் நான் எப்போதும் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.
தரமான மற்றும் பயனுள்ள கல்வி மூலம் மட்டுமே வறுமையை வெல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
வாய்ப்புகளைத் திறக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், தலைமுறைகளுக்கு இடையிலான வறுமை சுழற்சியை உடைக்கவும் கல்வி மிகவும் வெளிப்படையான வழியாகும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் தெரிவித்தார்.
படிப்பைத் தொடர்ந்த மாணவர்களுக்கு நான் எப்போதும் உதவி வருகிறேன்.
அந்த வகையில் நேற்று, மூன்று மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்திற்கான ஒரு சிறிய நன்கொடையை வழங்கினேன். காசோலைகளை அவர்களின் தாயார் பெற்றுக் கொண்டார் என்று அவர் சொன்னார்.

