வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் டிச 14-
வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியை ஐபிஎப் தலைவர் டத்தோ லோகநாதன் கேட்டுக் கொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் அடுத்த பொதுத் தேர்தலிலும் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

கடந்த பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்ற தொகுதி. அடுத்த தேர்தலில் மூன்று தொகுதிகள் வழங்கினால் கூட ஏற்றுக் கொள்வோம் என்று அவர் சொன்னார்.

இன்று காலையில் நடைபெற்ற ஐபிஎப் கட்சியின் 33 ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் கொள்கையுரை ஆற்றிபோது அவர் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles