
காளிதாஸ் சுப்ரமணியம்
செமினி டிச 14-.
புயல் மலை வீசினாலும் ஆட்டம் காணாத கட்சியாக ஐபிஎப் விளங்குகிறது என்று தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
ஐபிஎப் கட்சி தொடங்கப்பட்ட 35 ஆண்டுகள் ஆகின்றன.
இன்று ஐபிஎப் கட்சியின் 33 ஆவது தேசிய பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன்.
ஐபிஎப் கட்சி பல போராட்டங்களையும் சவால்களையும் சந்தித்துள்ளது.
ஏன் புயலை கூட தாண்டி வந்துள்ளது.
இருப்பினும் எந்த காலத்திலும் ஆட்டம் காணாத கட்சியாக ஐபிஎப் தொடர்ந்து விளங்குவது மிகவும் பாராட்டுக்குரியது.
தேசிய முன்னணிக்கு முழு விசுவாசமாக ஐபிஎப் இருந்து வருகிறது என்று அவர் சொன்னார்.

