மஇகா தேசிய முன்னணியிலிருந்து வெளியாகக் கூடாது. : டத்தோ லோகபாலா

சுங்கைபட்டாணி, டிச 15-
தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து மஇகா வெளியாக்கூடாது என பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கூறினார்.

பிபிபி கட்சி கெடா மாநில மாநாட்டில் கலந்துக் கொண்ட அவரிடம் தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து மஇகா விலகுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஆனால் பிபிபி கட்சி தேசிய முண்ணனி அரசாங்கத்தில் இணைவதற்கு போராடிக் கொண்டிருகிறது என அவரிடம் வினவியபோது, இந்த நாட்டில் அனைவரையும் அரவணைத்து செல்வது தேசிய முன்னணி அரசாங்கம் தனித்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.

நாட்டில் வாழும் இந்தியர்களுக்காகவும், மொழி, சமயம், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் மஇகா கட்சிதான் அதன் பாதுகாவலன். அதற்காக தனது போராட்டங்களை தொடர்ந்து முன்வைத்துள்ளது.

இந்த நாட்டில் தொடர்ந்து மொழி, சமயம், கலாச்சாரம், தமிழ்ப்பள்ளிகள் பாதுக்கப்பட வேண்டும் என்றால் தேசிய முன்னணி அரசாங்கத்திடம் இணைந்து இருப்பதுதான் சிறப்பாகும் என்பது தனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார் அவர்.

பிபிபி கட்சியின் போராட்டம் மஇகாவோடு ஒப்பிடமுடியாது. பிபிபி பல இன கட்சியாகும். மஇகா இந்தியர்கள் கட்சி. மலேசியா எனச் சொல்லப்படும் நாட்டின் வளர்ச்சி அதன் சமுதாய வளர்ச்சி குறித்துதான் பிபிபி கட்சி போராட்டமாகும். 80 சதவிகித்தனர் இந்தியர்கள் இருக்கின்றனர். நாங்களும் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் ஆதரவு தந்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்து தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அதற்கான முனேற்பாடுகள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அதன் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

2லட்சத்து 20 ஆயிரம் பேர் கட்சியில் மீண்டும் இணைந்திருப்பதாகசொன்னார்.கடந்த ஒரு வருடத்தில் 60ஆயிரம் பேர் கட்சியில் புதியதாக இணைந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பலரின் முகவரிகள் தொலைந்து இருப்பதால் தொடர்ந்து ஒரு லட்சத்திற்கு அதிகமானோரை தேடி வருவதாகவும். நாடு முழுவதிலும் அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான கிளைகள் திறந்து வருவதாக டத்தோ லோகா பாலா தெரிவித்தார்.

நாட்டின் அடுத்த பொதுத்தேர்தலில் பிபிபி கட்சி போட்டியிடும்மா என தொடர்ந்து வினவியபோது,வரும் பொதுத்தேர்தலில் தங்களுக்கு எந்தக் கூட்டணியும் இல்லை என்றால் 8 நாடாளுமன்றமும் 12 சட்டசபைக்கும் தனிப்பட்ட முறையில் போட்டியிடவிருப்பதாக சொன்னார். கெடா மாநிலத்தில் ஒரு நாடாளுமன்றத்திற்கும் ஒரு சட்டமன்றத்திலும் பிபிபி கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றார் டத்தோ டாக்டர் லோகா பாலா.இந்த மாநாட்டை கெடா மாநில தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ டிராஜா மகாதீர் காலிட் கலந்து அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். மாநிலத் தலைவர் மணிவாசகம் சுப்பிரமணியம் தலைமையில்சிறந்த முறையில் இந்த மாநாடு காந்தி நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles