Karate-Do Goju Kai Selangor சங்கத்தின் 8ஆவது கோஜு கை ஆண்டு விருந்து நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது!

காஜாங், டிச 15-
Persatuan Karate-Do Goju Kai Selangor
சங்கம் ஏற்பாடு செய்த 8ஆவது கோஜு கை ஆண்டு விருந்து 2025 கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமை காஜாங், தாமான் புக்கிட் மேவா, டேவான் ஓராங் ரமாய் அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் (MPKJ)
துவான் தியாகராஜா ராஜகோபால் அவர்கள் சிறப்பு வருகை தந்து அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஐவருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

International Karate-Do Goju Kai Association (IKGA), ஜப்பான் வழங்கிய பயிற்றுநர் சான்றிதழ்களை 5 பேர் அதிகாரப்பூர்வமாகப் பெற்றனர்.

இந்த சான்றிதழ்கள்
துவான் தியாகராஜா ராஜகோபால் (MPKJ நகர மன்ற உறுப்பினர்),
மாஸ்டர் யொண்டான் J. சிதம்பரம்
(சிலாங்கூர் கராத்தே-டோ கோஜு கை சங்கத் தலைவர்),
சென்செய் S. பிரபகரன்
(சிலாங்கூர் கராத்தே-டோ கோஜு கை சங்க ஒருங்கிணைப்பாளர்) ஆகியோரால் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு விருந்து நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் மற்றும் பயிற்றுநர்கள் — கலந்து கொண்டனர்.

ஆண்டு விருந்தின் முக்கிய நோக்கங்கள்

•   சாதனைகளை கொண்டாடுதல்
•   கடின உழைப்பை பாராட்டி விருதளித்தல்
•   ஒற்றுமையை வலுப்படுத்துதல்
•   சங்கத்தின் மதிப்பீடுகள் மற்றும் எதிர்கால நோக்கத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவையாகும்.

மேலும், பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற அனைத்து வீரர்களையும் சங்கம் கௌரவித்து பாராட்டியதோடு பலருக்கு சாம்பியன்ஷிப் விருதுகளையும் வழங்கியது.

விருது பெற்றோர் பட்டியல் – 2025

1) சிறந்த செயல்திறன் விருது – 2025

காத்தா (KATA) பிரிவு
1. G. யுகேந்தேவன்
2. S. யுவஸ்ரீ

குமிட்டே (KUMITE) பிரிவு
1. V. திரிசாந்த்
2. தனுஷ்கா
3. நாதுரன்

2) சிறந்த வருகை விருது – 2025
1. அவினாஷ்
2. தெஸ்வின் நாயர்

3) சிறந்த ஆதரவளிக்கும் பெற்றோர் – 2025
1. எலிஸ்
2. அமுதா
3. கவிதா

4) சென்செய் அர்ப்பணிப்பு விருது – 2025
1. V. சந்திரசேகரன்
2. P. தனராஜ்
3. M. நரேஷ்
4. S. பிரபகரன்
5. ஹஸ்னாஃபர் அலிகான் (ஹசன்)

ஆண்டின் சிறந்த பயிற்றுநர் – 2025
1. I. தயாவரன்

5) ரைசிங் ஸ்டார் விருது – 2025
1. J. நவநிதன்
2. J. மகேஸ்வர்

6) பன்முகத் திறமை விருது – 2025
1. R. கார்த்திகேயன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles