
சங்கிகள் படையோடு வந்தாலும் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்; ஜெயித்து காண்பிப்போம் என்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து உள்ளார்.
அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல். அண்மையில் கூட, என்ன பேசினார்? பீகாரை ஜெயித்துவிட்டோம், “அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார். மாண்புமிகு அமித்ஷா அவர்களே, நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. இது தமிழ்நாடு. எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே, அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம், எதிர்த்து நிற்போம்.
உங்களை ஜெயித்துக் காண்பிப்போம். மீண்டும் சொல்கிறேன். அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம். எதிர்த்து நிற்போம். உங்களை ஜெயித்துக் காண்பிப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

