கங்கார் பூலாய் முருகன் கோயில் அதே இடத்தில் மீண்டும் அமைக்க வேண்டும்!

கூலாய், டிச 22-
ஜொகூர் மாநில ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினரான திரு. ரவின்குமார் கிருஷ்ணசாமி, கூலாய் நகராட்சி மன்றம் தனது கவனத்திற்கு கொண்டு வராமல், கங்கார் பூலாய் முருகன் கோயிலை உடைத்துவிட்டதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 15ஆம் தேதி ஜொகூர் மாநிலத்தில் பொது விடுமுறை காலத்தில் இந்த கோயிலை உடைத்தது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த கோவில் உடைப்பு சம்பவத்திற்கு ஜொகூர் மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.

பல இன மக்கள் வாழும் ஒரு நாட்டில், மத சம்பந்தமான விவகாரங்களை கையாளும் போது மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும்.

அதை மறந்து கூலாய் நகராண்மைக் கழகம் நடவடிக்கை ஏமாற்றத்தை அளிக்கிறது.

இந்த தவறைச் சரிசெய்ய, ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஆபீஸ் அந்த கோயிலை அதே இடத்தில் மீண்டும் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஏனெனில் அந்த இடம் முன்பு தோட்டமாக இருந்த காலத்திலேயே அந்த கோயில் அங்கே அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த நிலம் தனியாருக்குச் சொந்தமானது அல்ல; மாறாக நகராட்சிக்குச் சொந்தமானது.

எனவே அந்த இடத்தை கோயிலுக்குப் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்.

எனவே, புண்பட்டுள்ள அந்த வாட்டர இந்திய சமூகத்தை ஆறுதல் படுத்தும் வகையில், திரு. ரவின் குமார் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அதுவே சரியான தீர்வு என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும் என, ஜொகூர் மாநில பெரிகாத்தான் நேசினால் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் உச்சமன்ற உறுப்பினருமான திரு. சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles