
கோலாலம்பூர் டிச 22-
நாட்டில் சொஸ்மா சட்டம் தேவையில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நடப்பில் உள்ள கிரிமினல் சட்டமே போதுமானது என்று உரிமை கட்சியின் தலைவர் டாக்டர் பி.இராமசாமி தெரிவித்தார்.
முன்பு எதிர் கட்சியில் இருந்தபோது சொஸ்மா சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் இப்போது அதை ஆதரிப்பது வேடிக்கையாக உள்ளது.
ஒருவர் தவறு செய்திருந்தால் அவர் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் சொஸ்மா சட்டத்தை பயன் படுத்தி அவர்கள் தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள். இவர்கள் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.
ஆகவே இந்த சொஸ்மா சட்டம் அகற்றப் பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நேற்று சீன அசெம்பிளி மண்டபத்தில் சிலாங்கூர் மாநில உரிமை கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பாகான் டாலம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்ஷல், சுதன் மற்றும் வழக்கறிஞர் சம்சீர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
சிலாங்கூர் மாநில உரிமை கட்சியின் தலைவர் செகு சேகர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

