
கோலாலம்பூர் டிச 23-
கடந்த
14-12-2023 ஆம் தேதி பண்டார் பூச்சோங் உத்தாமாவில் என் வீட்டில் முகமுடி அணிந்து வந்து கொள்ளையடித்தனர்.
92 வயதான என் அம்மாவை கடுமையாக தாக்கினர்.
என்னையும் தாக்கி கடுமையாக தாக்கியதோடு
எனது ஒரு வயது குழந்தை மீதும் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினர்.
ஒரு மாதத்திற்கு பிறகு என்னை போலீசார் அழைத்தனர்.
அப்போது வீட்டில் கொள்ளையடித்த சில பொருட்களை நான் போலீசாருக்கு நான் அடையாளம் காட்டினேன்.
என் வீட்டில் கொள்ளையடித்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் தண்டிக்கும் படி பலமுறை கோரிக்கை மகஜரை கொடுத்தேன்.
எனக்கு நீதி கிடைக்க மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் வி.கே.ஸ்ரீரமேஷ் கடுமையாக பாடுபட்டார்.
தேசிய போலீஸ் படைத் தலைவர், புக்கிட் அமான் குற்றவியல் தடுப்பு பிரிவு மற்றும் சுவாகாமிடம் மகஜரை சமர்பித்தோம்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு என் வீட்டில் கொள்ளையடித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் டிசம்பர் 24,26 ஆம் தேதிகளில் விசாரணைக்கு வருகிறது.
என் வீட்டில் கொள்ளையடித்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனபாலன் முருகையா தெரிவித்தார்.

