ஃபிஃபா வெளியிட்ட புதிய காற்பந்து தரவரிசையில் ஹரிமாவ் மலாயா அணி 121ஆம் இடத்திற்கு சரிந்தது

கோலாலம்பூர், டிச 23 – அனைத்துலக காற்பந்து சம்மேளனம் (FIFA) வெளியிட்ட புதிய தரவரிசையில் ஹரிமாவ் மலாயா உலக அளவில் 121வது இடத்திற்கு சரிந்தது.

நேற்று வெளியிடப்பட்ட புதிய தகவலின்படி, ஹரிமாவ் மலாயா 1,145.9 புள்ளிகளைப் பெற்று, முன்பு இருந்த உலக அளவிலான 116வது இடத்திலிருந்து ஐந்து இடங்கள் சரிந்து 121வது இடத்தைப் பிடித்துள்ளது.

மலேசியா தகுதியற்ற வீரர்களைக் களமிறக்கியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 4 அன்று சிங்கப்பூருக்கு எதிராகவும், செப்டம்பர் 8 அன்று பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் பெற்ற இரண்டு வெற்றிகளையும், மே 29 அன்று கேப் வெர்டேவுக்கு எதிராக சமநிலை பெற்ற ஒரு போட்டியையும் FIFA ரத்து செய்த முடிவைத் தொடர்ந்து இந்த தரவரிசை சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட மூன்று போட்டிகளிலும் மலேசியா 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததாக FIFA அறிவித்தது. தோல்வி அறிவிப்புடன், மலேசிய காற்பந்து சங்கத்திற்குச் சுமார் RM51,414 அபராதமும் விதிக்கப்பட்டது.

fifa

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles