
மஞ்சோங், டிச 23-
இங்குள்ள மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா கோலாகலமாகவும், சிறப்பாகவும் நடந்தேறியது.
தற்போது இப்பள்ளியில் 410 மாணவர்கள் பயில்கின்றனர்; 28 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இம்முறை மாணவர்களை உற்சாகப் படுத்தும் பொருட்டு 15 பிரிவுகளாக பரிசுகள் வழங்கும் நிகழ்வு வரையறுக்கப்பட்டன.

அதில் 15 பிரிவுகளில் சிறந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்துள்ளதாக இப்பள்ளியின் தலைமையாசிரியர் மாரியம்மாள் கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் கூறினார்.
அத்துடன், இவ்வாண்டில் புதிய 5 சுழற்கிண்ணங்கள் மாணவர்களுக்கு பரிசாக வழங்க அறிமுகம் செய்யப்பட்டது.

இவையாவும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைமைத்துவத்துவம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியம் ஆதரவில் சிறப்பாக செய்யப்பட்டது. இந்நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக செயல் நடவடிக்கைகள் மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார்.
இவ்வாண்டில் பதினைந்து பிரிவுகளில் மாணவர்களின் அடைவு நிலையை அடையாளம் கண்டறிந்து பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

அவற்றில்; கல்வியில சிறந்த அடைவுநிலை, செழுமை விளிம்பு, நம்பிக்கை ஒளிர் விருது, பாலர்பள்ளி விருது, சிறந்த சேவை விருது, நடனமணிகளுக்கான அங்கீகாரம், தனித்தன்மை விருது, சிலம்பராணி விருது, சீருடை இயக்க விருது, காற்பந்து நட்சத்திர விருது மற்றும் மாண்புமிகு அருந்தகை விருது, நிலம் அருந்தகை விருது, விளையாட்டு அருந்தகை விருது, இணைப்பாடத்திற்கான விருது, சிறந்த கல்விச்சார் இறுதியாண்டு விருது போன்றவைகள் மாணவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்று பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணேஷ் மனோகரன் தெரிவித்தார்.

