பகடிவதை சம்பவங்கள் பள்ளிகளில் தடுப்பதற்கு முன்னெடுப்பு நடவடிக்கைகள் அவசியம்!

மஞ்சோங், டிச.23-
பகடிவதை சம்பவங்கள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில், மலேசிய தமிழ்ப்பள்ளிகளில் முதல் பள்ளியாக சித்தியாவான் பேராவில் உள்ள சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி, பகடிவதையை தடுக்கும் முயற்சியாக, ‘Bebas Buli Jiwa Merdeka’ எனும் பாடலை மலாய் மொழியில் வெளியீடு செய்துள்ளனர்.

இப்பாடல் வரிகளை அப்பள்ளியின் புறப்பாட பிரிவு துணைத்தலைமையாசிரியர் ஆசிரியர் திரு கணேசன் சண்முகம் அவர்கள் எழுதி, ஆசிரியர் திரு கோபிநாத் கோவிந்தசாமி அவர்கள் Suno AI மூலம் இசை மெருகூட்டி, காணொளியாக வெளியிடப்பட்டது.

இவ்வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு வருகைப்புரிந்த கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கர நாராயணன் அவர்களுக்கும், மஞ்சோங் மாவட்ட இணைக் கல்வி அதிகாரி Tuan Haji Mohd. Fadzil bin ismail அவர்களுக்கும், பேராக் மாநில ஓய்வுப்பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கும், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும், வாரிய குழுவிற்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியை பரமேஸ்வரி சந்திரன் நன்றியைத் தெரிவித்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles