
கோலாலம்பூர் டிச 26-
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இனிய பண்டிகை தான் கிறிஸ்துமஸ்.
இயேசு கிறிஸ்து அவதரித்த இந்த திருநாள், இருளில் இருந்து மனிதகுலத்தை மீட்டெடுத்து அன்பும் ஒளியும் பரப்பும் நாளாக கருதப்படுகிறது.
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் மிகப் பெருமையுடன் கொண்டாடப்படும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் அமைப்பு செயலாளர் ஜஸ்டின் ராஜ் சவரிமுத்து தமது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய திருநாட்டில் அனைத்து இன மக்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த தருணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெரும் ஆனந்தம் அடைவதாக அவர் சொன்னார்.

