
2023 முதல் டிசம்பர் 19 வரை MYFutureJobs போர்டல் மூலம் 620,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்ட போதிலும் மடானி அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரத்தின் மீள்தன்மையை நிரூபிக்கிறது.
இதுவரை பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மலேசியாவின் பொருளாதார செயல்திறன் குறித்த அனைத்துலக நாணய நிதியத்தின் நேர்மறையான மதிப்பீட்டிற்கு ஏற்ப உள்ளது.
மேலும் அனைத்துலக நாணய நிதியத்தின் அங்கீகாரம் நாட்டின் உள்நாட்டு அடிப்படை வலிமையையும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட நிதி, பொருளாதாரக் கொள்கைகளின் செயல்திறனையும் பிரதிபலிக்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் மேலும் கூறினார்.

