
புத்ராஜெயா: டிச 28-
1 எம்டிபி வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றவாளி என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செக்வேரா முன்தினம் இரவு 9 மணிக்கு இந்த தண்டனையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பதவியைப் பயன்படுத்தி 1 எம்டிபி நிதியிலிருந்து 2.3 பில்லியன் ரிங்கிட் மோசடி செய்த நான்கு குற்றச்சாட்டுகளிலும், அதே அளவு பணமோசடி செய்த 21 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது.
பதவி துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளுக்கும், நஜிப்பிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பணமோசடி குற்றத்திற்கான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நீதிபதி விதித்தார்.
இவை அனைத்தும் ஏககாலத்தில் அமல்படுத்தப்படும் என்று நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செக்வேரா கூறினார்.

