கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் கோயில் நிர்வாகத்துடன் துணை நிற்க வேண்டும் -சந்திரசேகரன் கோரிக்கை!

கூலாய் டிச 27-
கடந்த 15ஆம் தேதி கூலாய் நகராட்சி கழகத்தால் இடிக்கப்பட்ட கங்கார் பூலாய் மலையாளும் முருகன் கோயில் நிர்வாகத்தினரை நேரில் சந்தித்து, நடப்பு நிலவரங்களை கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நிக் சிங் கேட்டறிந்ததைத் தாம் வரவேற்பதாக, கூலாய் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் தலைவர் திரு. சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்தார்.

அந்த கோயில் நிர்வாகத்துடன் நடந்த சந்திப்பில்,அவர்களின் நோக்கம் மற்றும் அவர்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களை புரிந்து கொண்டு,அவர்களின் நியாயமான கோரிக்கையான அக்கோயிலை அதே இடத்தில் நிலை நிறுத்துவதற்கான முயற்சிகளையும் தாம் முழுமையாக உணர்வதாக அவர் தெரிவித்தார்.

ஜொகூர் மாநில ஜசெக தலைவரும், தகவல் தொடர்பு துறை துணை அமைச்சருமான தியோ நீ சிங், அவர் சார்ந்த அரசியல் கட்சி, ஆலய நிர்வாகம் தற்போது எதிர்கொண்டு வரும் உண்மை நிலவரங்களை உணர்ந்து உள்ளதை அவரது அறிக்கையில் உணர்வதாக சந்திர சேகரன் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் தியோ நீ சிங் உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்து, அந்த கோயிலை அதே வளாகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது அவரின் தார்மிகப் பொறுப்பு என்பதை இங்கே நினைவூட்டுவதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களில் இன உணர்வுகள், மரியாதை மற்றும் விவேகத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தை த தியோ நீ செங் வலியுறுத்தியிருப்பதை நினைவுபடுத்திய, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி, அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து கோயிலை மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டும் என ஜொகூர் மாநில பெரிக்கத்தான் நேஷனல் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் உச்சமன்ற உறுப்பினருமான சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles