மீண்டும் UPSR – PT3 தேர்வு!கல்வி அமைச்சரிடம் பேசுவேன் – யூனிஸ் வரன் அறிவிப்பு

கோலாலம்பூர் ஜன 11-
யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கல்வியமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று ஒற்றுமை துறை துணை அமைச்சர்
யூனிஸ்வரன் தெரிவித்தார்.

கல்வி தந்தை என போற்றப்படும் டான்ஸ்ரீ தம்பிராஜா உருவாக்கிய ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாட்டில் பெரும் கல்வி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு தேர்வுகளும் மாணவர்களுக்கு மிகவும் அவசியம்.அந்த வகையில் இது தொடர்பாக கல்வி அமைச்சரிடம் பேசுவேன் என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே
60,000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவாக்கியுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

கல்வியின் வாயிலாகவே ஏழ்மையை ஒழிக்க முடியும் என்ற அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தற்போது வெற்றியை கண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் என்ற முறையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்துடன் இணைந்து செயல்படுவேன்.

அதே வேளையில் மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகளை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளது.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு இதுபோன்ற தேர்வுகள் மிகவும் அவசியமாகும்.

ஆக இக்கோரிக்கைகளை கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்கின் பார்வைக்கு கொண்டு செல்வேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles