சென்னையில் அயலகத் தமிழர் தின மாநாடு கோலாகலமாக தொடங்கியது!மலேசியாவில் இருந்து 500 பேராளர்கள்

சென்னை ஜன 11-
அயலகத் தமிழர் தினம் 2026 – உலகத் தமிழர்களின் பெரும் ஒன்றுகூடல்!
ஆயிரம் ஆண்டுகளாக நாகரிகம், அறிவு, மரபு, மொழி ஆகியவற்றை வழிநடத்தி வரும் தமிழின் சிறப்பை கொண்டாடும் விழா இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.

திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் (ஜனவரி 11 & 12 சனி, ஞாயிறு) நடைபெறுகின்ற அயலகத் தமிழர் மாநாடு இன்று எழுச்சியும் உற்சாகமும் பொங்க காணப்பட்டது.

இதில் பங்கு கொள்ளவும் தங்களின் தொப்புள் கொடி உறவை புதுப்பிக்கவும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பேராளர்கள் சென்னைக்கு அணி திரண்டு உள்ளனர்.

மலேசியாவில் இருந்து மட்டும் 500க்கும் மேற்பட்ட பேராளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் பிறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு தலைமையில் பினாங்கு மாநில அரசாங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வதுடன் அவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ மூ சரவணன், ஓம்ஸ் அறவாரியத் தலைவர் பா தியாகராஜன், தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ சகாதேவன், போர்ட் டிக்சன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரவி, மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி சாசா, ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி, பினாங்கு மாநில கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் டத்தோ பால நம்பியார், முனைவோர் டாக்டர் இராஜேந்திரன், பூச்சோங் முரளி மற்றும் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தமிழர் பாரம்பரிய விழாக்களுடன்
மாநாடு இனிதே தொடங்கியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles