
கோலாலம்பூர் ஜன 15-
மலேசியாவில் மூன்றாவது பெரிய இனமாகவும்,
உலகின் மூத்த இனமாகவும்,
உலகின் உயர்த் தனி செம்மொழியான தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்களாகவும், பண்டைய நாகரிகம், பண்பாடு, வரலாற்றை தன்னகத்தே கொண்ட இனமாக திகழும் தமிழர் இனத்தின் புத்தாண்டான பொங்கலுக்கு பொது விடுமுறை வழங்குவதோடு – ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக மாண்புமிகு பிரதமர் அன்வார் இப்ராகிம் அவர்கள் அறிவிக்க வேண்டும்.
மலேசியாவில் ஏறக்குறைய இருபது இலட்சத்திற்கும் மேலான தமிழர்கள் வாழ்கிறார்கள்.
மிக நீண்ட காலமாக மலேசிய திருநாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார கட்டமைப்பை உருவாக்கியதில் தமிழர்களின் பங்கு அளப்பரியது.
போற்றுதலுக்குரியது. மிக நீண்ட காலமாக
பொங்கலுக்கு பொது விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் விடுக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு இனம், மொழி, சமயம், கலாசாரத்தை கொண்டுள்ள நம் நாட்டில் ஓவ்வொரு இனமும் அவர்களின் மொழி மற்றும் பண்பாட்டை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் கனடா, இங்கிலாந்து ,
ஆசுதிரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அந்த நாட்டு அரசுகள் அறிவித்திருக்கின்றன.
மேற்கண்ட நாடுகளைப் போல் மலேசிய மண்ணில் கடந்த 250 ஆண்டுகளாக இந்த மண்ணுக்காக உழைத்து நாட்டை மேம்படுத்திய வரலாற்றை கொண்ட தமிழர்களின் சேவையை போற்றும் விதமாக பொங்கலுக்கு விடுமுறையும் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாகவும் மலேசிய அரசு அறிவிக்க வேண்டும்.
கணேசன்
உரிமை

