மலேசிய சுற்றுலா ஆண்டை முன்னிட்டு SMS Deen Jewellers தங்க காசை அறிமுகம் செய்தது!

கோலாலம்பூர் ஜன 15-
2026 மலேசிய சுற்றுலா ஆண்டை முன்னிட்டு நாட்டில் புகழ்பெற்ற எஸ்எம்எஸ் டின் ஜூவல்லர்ஸ் தங்க மாளிகை நேற்று தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தியது.

மலேசிய சுற்றுலா ஆண்டை முன்னிட்டு மலேசிய சுற்றுலா துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலேசிய சுற்றுலா துறை வாரியத்தின் விடியோ விளம்பரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள எஸ்எம்எஸ் டின் ஜூவல்லர்ஸ் தங்க நாணயம் அறிமுக விழா கோலாகலமாக நடைபெற்றது.

மலேசிய சுற்றுலா துறை தலைவர்
டத்தோ மனோகரன் பெரியசாமி அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து எஸ்எம்எஸ் டின் ஜூவல்லர்ஸ் தங்க நாணயத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் எஸ்எம்எஸ் டின் ஜூவல்லர்ஸ் தங்க மாளிகை தலைமை செயல் முறை அதிகாரி முகமட் சைபுடின் அனைவரையும் வரவேற்று பேசினார்.

நேற்று நடைபெற்ற வரலாற்று சிறப்பு நிகழ்வில்
எஸ்எம்எஸ் டின் ஜூவல்லர்ஸ் தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் டத்தோ முகமட் ஷீராஜூடின்,
மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மற்றும் டத்தோ வீரா சாகுல் ஹமிட் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles