

அம்பாங், ஜன 17 –
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் இன்று அம்பாங் தாசேக் பெர்மாய் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் தைப்பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் Yb syed Ahmad (Adun lempah jaya), Yb yew jia haur
(Adun teratai) மற்றும் மகேந்திர குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் நடேசன், மோகன் ராஜ் மற்றும் கிராம தலைவி சரஸ் ஆகியோர் தைப்பொங்கல் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

காலையில் சிறப்பு பூசைக்கு பின்னர் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 101 பானையில் பொதுமக்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
தோரணம் கட்டுதல், கோலம் போடுதல், சரம் கட்டுதல் மற்றும் ஓவியம் வரையும் போட்டியில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

