
கோலாலம்பூர் ஜன 18-
பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சி மீண்டும் தேசிய முன்னணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்தார்.
தேசிய முன்னணியில் பிபிபி இணைவதை தேசிய சங்கங்களின் பதிவு இலாகா உறுதி செய்துள்ளது.
அந்த வகையில்
வரும் ஜனவரி 21 ஆம் தேதி, கோத்தா கினபாலுவில் (சபா) நடைபெறும் பிஎன் உச்ச மன்றக் கூட்டத்தில், பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா அழைக்கப்பட்டு, ஒரு சிறப்பு நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கிய ஒரு சம்பிரதாயம் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறினார்.
இன்று புத்ரா வாணிப மையத்தில் பிபிபி கட்சியின் 72 ஆவது தேசிய பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

