5 வயதில் பாலர் பள்ளி!6 வயதில் முதலாம் வகுப்பு!டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர் ஜன 20-
வரும் 2027 இல், டிசம்பர் விடுமுறைக்குப் பின்பு பள்ளிகள் திறக்கப்படும் வேளையில், 5 வயது பிள்ளைகள் பாலர் பள்ளிகளிலும் 6 வயது பிள்ளைகள் முதலாம் ஆண்டிலும் கல்வி கற்பார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முக்கிய அறிவிப்பு அறிவிப்பு செய்துள்ளார்.

நேற்று நாடாளுமன்ற அவையில் ஆற்றிய உரையின் போது மேற்கண்ட திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

கல்வி அமைச்சுடன் இது குறித்து தாம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டபோது இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டில் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் எனும் திட்டத்தில் இவ்வாண்டுத் தொடக்கத்தில் தத்தம் பிள்ளைகளை பெற்றோர்கள் அனுப்பி வைத்த வேளை, பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டில் கல்வி கற்க சென்ற பல பிள்ளைகள் பள்ளி நுழை வாயிலில் பெற்றோருடன் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததை ஊடகச் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட படக் காட்சித் தொகுப்புகளைத் கண்ட பின்னரே இத்தகைய முடிவை தாம் எடுத்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கருத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles