பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் ம இகா! ஒப்புதல் கிடைத்தது

கோலாலம்பூர்: ஜன 21-

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் மஇகா இணைவதை அக் கூட்டணியின் உச்சமன்ற கூட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெரிக்கத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூட்டணியில் மஇகா சேருவதற்கான விண்ணப்பத்தை அங்கீகரித்ததாகக் கூறப்படுகிறது.

இது எதிர்க்கட்சி கூட்டணியின் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.

கடந்த டிசம்பர் 9 அன்று நடைபெற்ற தேசியக் கூட்டணியின் உயர் தலைமைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக பெர்சத்து, தேசியக் கூட்டணியைச் சேர்ந்த மூன்று பேர் இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

அக்கூட்டத்தில் மஇகா தலைமை சமர்ப்பித்த கடிதம், மஇகா தலைமையுடனான சந்திப்பு குறித்து தேசியக் கூட்டணி தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசினிடம் நீண்ட விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ள கூட்டணி வலுப்படுத்துவதில் மஇகா, பிற அரசியல் கட்சிகளின் முக்கியத்துவத்தை டான்ஶ்ரீ மொஹைதின் வலியுறுத்தினார்.

மஇகாவை ஏற்றுக் கொள்வதற்கான முக்கிய காரணம், பல நகர்ப்புற இடங்களில் தீர்க்கமானதாக இருக்கும் இந்திய சமூகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் ஆதரவை பிஎன் ஈர்க்க உதவுவதாகும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles