
கோலாலம்பூர் ஜன 21-
கடந்த ஆண்டு தலைநகரில் அமைந்துள்ள 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் நில சிக்கலுக்கு பிறகு சமூகவலை தளங்களில் தொடர்ச்சியாக இந்து கோவில்களை Haram என்று இழிவாக பேச தொடங்கி, இன்று மலேசிய முழுவதும் இந்து கோவில்கள் என்றாலே அது haram என்ற பார்வைக்கு மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
அதில் ஒரு முக்கியமான நபர்,தனக்கு மட்டுமே அறிவு இருப்பது போலவும், வேறு யாருக்குமே துளியும் அறிவு இல்லாதது போல் நினைத்து கொண்டு தொடர்ச்சியாக இந்து கோவில்களை Haram என்று சொல்லி ஆதாரமற்ற கருத்துக்களை பதிவிட்டு இந்துக்கள் மனதை தொடர்ச்சியாக புண்படுத்தினார்.
மலேசிய நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமயச் சுதந்திர உரிமை, அதாவது Right to Freedom of Religion அளிக்கப்பட்டு இருக்கிறது.
கோவில்களின் நில சிக்கல் என்பது கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் சரியான திட்டமிடல் இல்லாமல் மற்றும் அலட்சியப்போக்கும் தான் காரணம்.
அதே சமயத்தில் எந்த ஒரு மத தொடர்பானவற்றை இழிவுபடுத்துவதற்கு மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை.
நாட்டின் சட்டத்தின்படி மத இன உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர் மீது அரசாங்கம் உடனடியாக
( 3R) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அந்த நபர் மீது அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அந்த நபரை மரியாதை கொடுத்து உச்ச கட்ட வரவேற்பு கொடுத்துள்ளது இந்துக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசிய இந்துக்களையும் அவமதிக்கும் செயலாக அமைந்திருக்கிறது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மற்றும் மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும் நபரை சந்தித்து உச்சகட்ட மரியாதையை வழங்கியிருப்பது இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத செயலா நான் பார்க்கிறேன்.
வரும் பொது தேர்தலில் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கதவர்களுக்கு
மக்களே பாடம் புகட்டுவார்கள் என்பதை சொல்லி கொள்கிறேன்.
குணசேகரன் குப்பன்
உரிமை இயக்கம்
சிலாங்கூர் மாநில ஒருங்கிணைப்பாளர்.

