கோலாலம்பூர் ஜன 22-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த பங்சார் தமிழ்ப் பள்ளிக்கு தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் 100 மடிக்கணினிகள் வழங்குவதாக இன்று அறிவித்தார்.
மேலும் பங்சார் தமிழ்ப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு 10,000 வெள்ளி மானியம் வழங்குவதாகவும் அறிவிப்பு செய்தார்.
தகவல் தொடர்பு துறை அமைச்சரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான பாமி பட்சில் இன்று காலை பங்சார் தமிழ்ப் பள்ளிக்கு சிறப்பு வருகை தந்தார்.
பங்சார் தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் டத்தோ சங்கர் அவர்கள் அமைச்சர் பாமிக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
பங்சார் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி தேவி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திருமதி லீலா உட்பட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு ஆரம்ப தொகையாக 150 வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்தார்.
அந்த வகையில் பங்சார் தமிழ்ப் பள்ளியில் பயிலும் 60 மாணவர்களுக்கு 8,850 வெள்ளி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பாமி பட்சில், பங்சார் தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை நூறாக உயர்த்தப்பட வேண்டும்.
குறைந்த மாணவர்களை கொண்ட பள்ளியாக பங்சார் தமிழ்ப் பள்ளி இருக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் பங்சார் தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க 100 மடிக்கணினிகளை வழங்குவதாக அவர் அறிவிப்பு செய்தார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு 10,000 வெள்ளியும் அதேசமயம் திறந்த வெளி மண்டபத்திற்கு தரமான கூரையை மாற்றி கொடுப்பதாகவும் அவர் சொன்னார்.
எனது நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பங்சார் தமிழ்ப் பள்ளிக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அவர் பலத்த கரவொலிக்கிடையே அறிவிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தக்க நேரத்தில் பங்சார் தமிழ்ப் பள்ளிக்கு உதவிகளை வழங்கிய அமைச்சர் பாமி பட்சில் அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி தேவி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திருமதி லீலா மற்றும் பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் டத்தோ சங்கர் ஆகியோர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.




