



பிறை ஜன 27-
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை மலேசியர்கள் இன்னமும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் பிறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டத்தோஸ்ரீ ராஜூ தலைமையில் கடந்த வாரம் இறுதியில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மாட்டு வண்டி ஊர்வலத்தோடு தொடங்கிய தைப்பொங்கல் தமிழர் திருநாள் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பிறை மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பிறை எம்பிபிகே தலைவர் ஸ்ரீ சங்கர் தலைமையில் எம்பிபிகே உறுப்பினர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தனர்.


பிறை வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் 100 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர்களின் உன்னத விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று டத்தோஸ்ரீ ராஜூ தெரிவித்தார்.
இந்த விழாவில் ஸ்ரீ சங்கர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு டத்தோஸ்ரீ ராஜூ பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

