


கோலாலம்பூர் ஜன 31-
நேற்று இரவு பத்து மணிக்கு மேல் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளி ரதம் பத்துமலை நோக்கி இன்னமும் புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது.
வழி நெடுகிலும் அர்ச்சனைகள் நடைபெற்றன. வெள்ளி ரதத்தின் முன்பும் பின்பும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மக்கள் ஒசை, மலேசிய நண்பன் மற்றும் தமிழ் லென்ஸ் – தினத்தந்தி இணையத்தளங்கள் மிகப்பெரிய அளவில் தண்ணீர் பந்தலை அமைத்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் குளிர் பானங்களையும் வழங்கியது.
விலாயா மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ பாடில் தண்ணீர் பந்தலுக்கு வருகை தந்த போது மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் ம இகா தண்ணீர் பந்தலில் பக்தர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.

அதே போல் ஜாலான் ஈப்போ 4 ஆவது மைலில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தண்ணீர் பந்தலை அமைத்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கினார்.

