


பத்துகேவ்ஸ் பிப் 1-
முருகப் பெருமான் குடிக் கொண்டிருக்கும் பத்துமலை திருத்தலத்தில் மேம்பாட்டு திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்குவேன் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று அறிவித்தார்.
குறிப்பாக பத்துமலை தைப்பூசத்தில் பல்நோக்கு மண்டபம் கட்டும் மற்றும் நகரும் படிக்கட்டுகளை நிறுவும் திட்டம் விரைவில் தொடங்கப்பட்டு, பொதுமக்கள், பக்தர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் என்று நான் மனதார நம்புகிறேன் என்றார் .
சகோதர சகோதரிகளே . தைப்பூச தினம் என்பது பன்முகத்தன்மையைக் கொண்டாடவும் நல்லிணக்கத்தைப் பேணவும் நம் அனைவருக்கும் ஒரு நினைவூட்டலாகும்.
இன்று உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.
அந்த வகையில் மலேசியாவில் புகழ்பெற்ற பத்துமலை திருத்தலம் உட்பட பல இடங்களில் தைப்பூசம் உச்சத்தை எட்டியுள்ளது.
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தைப்பூசத்தை காண மலேசிய வந்துள்ளனர்.
மலேசிய ஒரு சிறந்த நாடாக விளங்குகிறது என்பதற்கு இது விழா ஒரு எடுத்துக்காட்டு ஆகும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு இன்று பத்துமலை திருத்தலத்திற்கு சிறப்பு வருகை புரிந்தார்.
தேவஸ்தானத்தின் சார்பில் டான்ஸ்ரீ நடராஜா பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் சூன் வெய், மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி உட்பட பல வெளிநாட்டு தூதரகங்கள் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

