உமாராணி குழுமத்தின் தண்ணீர் பந்தல்!

கோலாலம்பூர் பிப் 3-
தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு தைப்பூசம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பத்துமலை திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் வெள்ளி ரதம் போகும் போதும் திரும்பி வந்த போதும் பொதுமக்கள் தண்ணீர் பந்தலை அமைத்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் குளிர் பானங்களையும் வழங்கினர்.

அந்த வகையில் ஜாலான் ஈப்போ 4 ஆவது மைலில் வெள்ளி ரதம் திருப்பி வந்த போது புகழ்பெற்ற உமாராணி குழுமத்தின் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் டத்தோ இராமலிங்கம் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles