
செந்துல், பிப் 11-
செந்துல் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் மாதாந்திர சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் இன்று கோலாலம்பூர் மருத்துவமனை வருகையாளர் வாரிய உறுப்பினரும் தித்திவங்சா தொகுதி ம.இ.கா. துணைத்தலைவருமான டத்தோ ஆறுமுகம் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
நற்சான்றிதழை செந்துல் மாவட்ட போலிஸ் தலைவர் ஏ.சி.பி அகமட் சுகார்னோ பின் முகமட் ஸஹாரி டத்தோ ஆறுமுகத்திற்கு எடுத்து வழங்கினார்.
காவல்துறை எப்பொழுதும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் ஒரு தரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த போலிஸ் துறை மக்களுடன் இணைந்து சேவையாற்றுவதற்கு ஒரு நல்ல உறவு பாலமாக இருக்கும் தரப்புக்கு இந்த நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் நடைபெற்ற இந்த மாத கூட்டத்தில் டத்தோ ஆறுமுகம் அந்த நற்சான்றிதழை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

