வழிபாட்டுத் தல விவகாரங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்: டத்தோஶ்ரீ ரமணன் வலியுறுத்தல்

கோலாலம்பூர், பிப் 12-

ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவது தொடர்பான விவகாரங்களை மக்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

“நமது நாட்டில் சட்டங்களும் விதிகளும் உள்ளன. நாம் அனைவரும் விதிகளைப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினையும் எழாது. எழும் பிரச்சினைகளைத் தீர்க்கப் பேச்சுவார்த்தைக்கான வழிகளை நாங்கள் வழங்குகிறோம்.

“தர்ம மதானி (Dharma MADANI) திட்டத்தின் மூலம், 1,000-க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு அரசாங்கம் 20 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்தது. அதே வேளையில், கடந்த ஆண்டு பிரதமரின் சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் வழிபாட்டுத் தலங்களுக்கு 3.5 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டது,” சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles