இந்து சமுதாயத்தை இழிவு படுத்தும் வார்த்தைகள் வேண்டாம்! மலேசிய இந்து சங்கம் வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா, பிப் 15-
இந்து சமுதாயத்தை இழிவு படுத்தும் வார்த்தைகளை யாரும் பயன் படுத்த வேண்டாம்.

குறிப்பாக தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆகவே அனைத்து தரப்பினரும் இந்து சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கேட்டுக் கொண்டார்.

Kuil Haram tidak sah என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் Kuil Tanpa Pendaftaran Sah வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

மேலும் இந்து ஆலயங்களின் விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்கவும் மலேசிய இந்து சங்கம் தயாராக இருக்கிறது.

இது தொடர்பாக பிரதமருக்கும் கடிதம் அனுப்புகிறோம் .

பிரச்சனை எதிர் நோக்கி இருக்கும் இந்து கோவில்கள் விவகாரம் தொடர்பாக ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் இணைந்து மலேசிய இந்து சங்கம் பணியாற்றும் என்று தங்க கணேசன் தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்கம் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles