
ஜொகூர், பிப் 17-
தம்போயில் அமைந்துள்ள ஆதி சிவன் முனீஸ்வரர் திருக்கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு தங்க ரத திருவிழா நடைபெற்றது.
தங்க ரத திருவிழாவில், மலேசிய மஹிமா தலைவர் டத்தோ ந.சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஆலய நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக இவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீக ஒளியால் நிரம்பிய இந்த விழா சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற ஆலயக் குழுவினர் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் திட்டமிட்ட முயற்சிகளை டத்தோ சிவகுமார் பாராட்டினார்.
மரபு வழிப் பாரம்பரியங்களைப் பேணுவதுடன், சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் இந்து ஆலயங்களின் பணி சமூகத்தால் உயர்வாக மதிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், திருவிழா சிறப்பாக நடைபெற இளைஞர் குழு உறுப்பினர்கள் இணைந்து செய்த ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் காட்டிய ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் தொழில்முறை அணுகுமுறை ஆலய நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்ததுடன் இளைய தலைமுறைக்கே முன்மாதிரியாக திகழ்வதாகவும் அவர் சொன்னார்.
இந்த தங்க ரத திருவிழா பக்தர்களுக்கு ஆன்மீக உற்சாகத்தையும் சமூக ஒற்றுமையையும் ஒருசேர அளித்த நிகழ்வாக அமைந்தது.

