தப்பெண்ணங்களைத் தவிர்த்து, நல்லிணக்கத்தைப் பேணுங்கள்! பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், பிப் 17: நாட்டின் பல்லின மக்களிடையே நீண்ட காலமாகப் பின்னப் பட்டிருக்கும் நல்லுறவையும் நம்பிக்கையையும் உணர்ச்சிகள், தூண்டுதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் சிதைத்துவிட அனுமதிக்க வேண்டாம் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டியுள்ளார்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அன்வார், இருக்கும் வேறுபாடுகளை நல்லிணக்க உணர்வை வலுப்படுத்தவும், தப்பெண்ணங்களை நிராகரிக்கவும், மேலும் சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக கலந்துரையாடல், பேச்சுவார்த்தை மற்றும் விவேகத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கவும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

“சீனப் புத்தாண்டு, முழு நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான வளம், நம்பிக்கை மற்றும் வலிமையை நமக்கு எப்போதும் நினைவூட்டுகிறது. இந்தக் குதிரை ஆண்டில், விடாமுயற்சி, தைரியம், போராட்ட குணம் ஆகியவைகளை கொண்டாடப்படும் அதே வேளையில், விவேகத்துடனும் எளிமையுடனும் செயல்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது.”

“மனிதர்கள் ஒருவரையொருவர் மதித்து புரிந்து கொள்ளும்போது நல்லிணக்கம் பிறக்கிறது என கன்பூசியஸ் நமக்கு நினைவூட்டுகிறார். வெவ்வேறு கலாச்சாரப் பின்னணிகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தாலும், பல்லின சமூகம் அமைதியாக ஒன்றிணைந்து வாழ இதுவே அடித்தளமாக அமைகிறது,” என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles