
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் பிப் 19-
மலேசிய இந்தியர் மக்கள் கட்சி விவகாரம் தொடர்பாக டாக்டர் சந்திரசேகரன் தரப்பினர் ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மலேசிய இந்தியர் மக்கள் கட்சிக்கு
உண்மையான தலைமைத்துவம் யார் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும் என்று கட்சியின் ஸ்தாபகர் டாக்டர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர் மக்கள் கட்சிக்கு நான்தான் தலைவர் என்று புனிதன் கூறுகிறார்.
இது உண்மைக்கு புறம்பானது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பதிவு இலாகா, தேசிய பதிவு இலாகா வின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் சூல்கிப்ரார், புனிதன் பரமசிவம் மற்றும் சதீஷ் குமார் நீலமேகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.
ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை வரும் மார்ச் 4 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்று டாக்டர் சந்திரசேகரன் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர் மக்கள் கட்சியை தோற்று வித்தது நாங்கள்.
கடந்த 2023 ஆம் ஆண்டு புனிதனை நாங்கள் இடைக்கால தலைவராக இருந்தார்.
ஆனால் அவர் உறுப்பினராக சேரவில்லை.
இதுநாள் வரை அவர் கட்சியில் அடிப்படை உறுப்பினர் இல்லை.
கட்சியை தோற்று வித்த என்னை உட்பட செயலாளர் டாக்டர் விக்டர்,
பொருளாளர் டத்தோ டாக்டர் இராமமூர்த்தி,
மாறன் மற்றும் சுந்தர் ஆகியோரை கட்சியில் இருந்து புனிதன் அதிரடியாக நீக்கினார்.
புனிதன் கட்சியில் இடைக்கால தலைவராக இருந்த போது கட்சிக்கு செலவு செய்த வரவு செலவு எதையும் காட்டவில்லை.
இப்போது மலேசிய இந்தியர் மக்கள் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆகவே மலேசிய இந்தியர் மக்கள் கட்சிக்கு உண்மையான தலைமைத்துவம் யார் என்பதை முடிவு செய்ய நாங்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளோம் என்று அவர் சொன்னார்.
எங்கள் சார்பாக பிரபல வழக்கறிஞர் செல்வம் சண்முகம் ஆஜராகியுள்ளார் என்று அவர் கூறினார்.

