திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக!ஸ்டாலின் அதிரடி வியூகம்

சென்னை: பிப் 19-
நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (பிப்.19) திமுகவுடன் தேர்தல் கூட்டணியை அமைத்துள்ளது தேமுதிக.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தான் ஏற்கெனவே சொன்னபடி தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பப்படி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறினார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி நீண்ட நாட்களாக நிலவிவந்தது.

அதன்படி, இன்று திமுகவுடன் தேமுதிக கூட்டணியை உறுதி செய்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

இதனிடையே சட்டமன்ற தேர்தலில் தேதிமுக எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பதை அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார் என்று அவர் சொன்னார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் வியூகம் வகுத்து வெற்றிகரமாக காய்களை நகர்த்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles