
கோலாலம்பூர் மார்ச் 1-
பிபிபி கட்சி எப்போதும் கல்விக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
கல்வி ஒன்றே ஒரு மாணவனின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

மாணவர்கள் கல்வியில் பின்தங்கி விடாமல் இருக்கவும் அவர்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பிபிபி கட்சியின் சார்பில் education careline எனப்படும் கல்வி உதவி அழைப்பு சேவையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி உள்ளது.
எஸ்பிஎம் தேர்வில் 5ஏ பெறும் மாணவர் ஒருவர் அடுத்தது எந்த கல்வியை தேர்வு செய்து மேற்கல்வியை தொடர்லாம் என்று பிபிபி கல்வி உதவி சேவை ஆலோசனை வழங்கும்.
அதே நேரத்தில் உபகார சம்பளம் மற்றும் கல்வி கடனுதவிக்கு முறையாக விண்ணப்பம் செய்யவும் நாங்கள் உதவுவோம் என்று அவர் சொன்னார்.
இன்றைய விழாவில் பிபிபி கட்சியின் செயலாளர் டத்தோ இண்டர்ஜிட், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், கல்வி பிரிவு தலைவர் விக்னேஷ் கிருஷ்ணகுமார், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

