பண்பட்ட ஜனநாயகம் பண்பு கொண்ட பிரதிநிதிகளே மலேசியாவுக்கு தேவை!!!

ஒரு நாட்டின் சமுகத்திற்க்காண செயல்பாடுகளையும் பொருளாதாரச் மேம்பாட்டையும்
கட்டமைப்பதில் பெரும்பங்காற்றுவது அந்த நாட்டின் நீடித்த நிலையான அரசியல்
நிலைத்தன்மையேயாகும்.

எந்த ஒரு நாடும் அரசியல் நிலைத்தன்மையின்றி
சீரழிந்துவிட்டால் ,அந்த நாடு மீண்டும் பொருளாதார
மேம்பாடு அடைவதற்கு மிகப் பெரிய சிரமத்தை எதிர்நோக்கும்.

பல்லின மக்கள் வாழும் நம் நாட்டில்
அரசியலில் நன்கு அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட
தலைவர்களால் நடத்தப்படும் அரசியல்தான் ஒரு நாட்டின் ஒருமித்த வளர்ச்சிக்குரிய நீடித்த
வழியை உருவாக்கி கொடுக்க முடியும்.

இந்தப் பக்குவமும், முதிர்ச்சியும் வயதையோ, அரசியல் அனுபவத்தையோ
வைத்து கணித்து
சொல்வது அல்ல அதற்கு மாற்றாக அரசியல் தலைவர்கள் நடைமுறையில் மக்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது மட்டுமின்றி ஒரு நாட்டு மக்களின் நலனுக்காக அரசியலை எவ்வாறு முன்னெடுகின்றனர் என்பதை பொறுத்தே அமையும்.

சிறந்த மக்களாட்சிக்குத் தேவை
மிகுந்த பொறுப்புணர்வும், பக்குவமும், ஒழுக்க நியதிகளும் உள்ளடக்கிய அரசியல் தலைவர்களை கொண்ட அரசியலேயாகும்.

இவ்வாறான கூறுகள் இல்லை என்றால், அந்த அரசியலானது ஒரு பண்பட்ட ஜனநாயகம் கொண்ட அரசியலாக இருக்கமுடியாது.

இந்தப் அரசியல் முதிர்ச்சியானது சிறந்த அரசியல் பண்பாடாக
ஒவ்வொரு அரசியல் நிகழ்விலும் வெளிப்படுத்தப் பட வேண்டும்.

நம்முடைய நாட்டில், பலர் தேர்தல் மட்டுமே ஜனநாயகம் என எண்ணி.
தேர்தலை நோக்கியே தங்களது செயல்பாடுகளை செய்து வருவதோடு மக்களையும் அதற்கேற்றவாறு நம்பவைத்து தங்களது அரசியல் காயை நகர்த்தி வருகின்றனர்.

சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களை அமைதியான முறையில் தீர்க்காமல்,
சமூகத்தின் ஒற்றுமையை பிளவு படுத்தும் முறையில் தங்களின் சுயநல அரசியலை செய்கின்றனர்.

சமகால பிரச்சினைகளை மட்டுமே அவ்வப்போது பேசி, அதற்கேற்றவாறு அறிக்கைகளை வெளியிட்டு விட்டு
தேர்தல் வேலை செய்ய முனைப்ப
காட்ட தொடங்கி விடுகின்றனர். குறிப்பாக இந்திய சமுதாயதிக்கான திட்டங்கள் எதுவும் கொள்கை அளவில் இன்றுவரை வகுக்கப்படவில்லை.
மக்களாட்சியின்
மாண்பு எங்கே இருக்கிறது என்றால், ஒரு நாட்டின் அரசியலும்,
அதற்கேற்ப ஆட்சியும் எவ்வாறு, எந்த அணுகுமுறையில் நடத்தப்படுகிறது என்பதை
வைத்துத்தான் கணிக்கப்படுகிறது.
என்பதை முதலில் அனைவரும் உணர வேண்டும்.

கணேசன்
உரிமை அரசியல் இயக்கம் .
தமிழ்ச் செய்தி தொடர்பாளர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles