

கோலாலம்பூர், மார்ச் 1-
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு ஸ்தாப்பாக் ஸ்ரீ ரம்பாய்
அல் மதரஸதுல் ஃபரீதிய்யா அலிமாஜூ உணவகக் குழுமம் மற்றும் பிரெஸ்மா இணைந்து 32 ஆவது ஆண்டாக டத்தோ ஜவஹர் அலி தலைமையில் வசதிக் குறைந்த 3,500 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கும் நிகழ்வு இன்று மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
மாஹத் தஹ்பீஸ் அல் பரீதிய்யா மதராஸாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை ஒவ்வொரு ஆண்டும் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று டத்தோ ஜவஹர் அலி தெரிவித்தார்.

பல நல்லுள்ளங்களின் ஒத்துழைப்புடன் கிட்டத்தட்ட 3,500 பேருக்கு உதவிப் பொருட்கள வழங்கப்பட்டது.
ரமலான் மாதத்தில் வசதிக் குறைந்த மக்களுக்கு உதவுவதை அல் மதரஸதுல் ஃபரீதிய்யா அறக் காரியமாக எண்ணி செயல்பட்டு வருகிறது என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.
இதனிடையே உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் தேசிய போலிஸ் படையின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான், அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அப்துல் சமாட், 100 plus குளிர்பான நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி முகமட் பாவ்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மிம்காய்ன் தலைவர் டத்தோ பி வி அப்துல் ஹமீத், பிரிம் ஆரிஃப், பெரஸ்மா துணைத் தலைவர் முஹிப்புல்லா கான், பொருளாளர் நசர்தீன், டத்தோ அலி ஜின்னா, டத்தோ ஜைனி, மியாக் நிறுவனத் தலைவர் ஹாஜி இப்ராஹிம், கிம்மா அன்சாரி, எம். எம். ஒய். சி ரிஃபாயி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

