செராஸ்‌ செலாத்தான் ஈயோனில் மூன்று தினங்களுக்கு ரத்ததான முகாம் பொதுமக்கள் பேராதரவு

தேசிய ரத்த வங்கியில் ரத்த பற்றாக்குறை காரணமாக செராஸ்‌ செலாத்தான் ஈயோனில் மூன்று தினங்களுக்கு ரத்த தான முகாம் பொதுமக்கள் பேராதரவு வழங்கினர்.

தேசிய ரத்த வங்கியில் ரத்தம் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனை நிறைவு செய்வதற்கு மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா ஸ்குவாட்ஸ் ஏற்பாட்டில் தேசிய ரத்த வங்கி இணைந்து பிப்ரவரி 27,28 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 1 ஆம் தேதி வரை சுமார் 350 குருதி நன்கொடையாளர்கள் தங்களது மனிதநேய அடிப்படையில் ரத்த தானம் வழங்கினர் என அதன் தேசியத் தலைவர் டாக்டர் இரா. பிரேமக்கண்ணன் தெரிவித்தார்.

ஸ்குவாட்ஸ் ஏற்பாட்டில் 92 வது முறையாக உயிர் காக்கும் ரத்த தானம் நிகழ்ச்சியை தேசிய ரத்த வங்கி, செராஸ்‌ செலாத்தான் ஈயோன், மலேசிய கூடாம் சங்கம் இணைந்து சிறந்த சேவைகள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மலேசியாவின் பல இன மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இதுபோன்ற மனிதநேய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தொண்டு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன் வந்து ஆதரவை தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு பை ரத்தமும் மூன்று உயிர்களைக் காக்கும் ரத்த தானத்தின் வழி பெறப்படும் ஒவ்வொரு பை ரத்தமும் மூன்று உயிர்களைக் காப்பாற்றும் என்பதால் ரத்ததானம் மிகவும் வரவேற்கத்தக்க அறப்பணி என்று அவர் கூறினார். குறிப்பாக விபத்துக்குள்ளானவர்கள், அறுவைச் சிகிச்சை செய்து கொள்வோர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுகிறது.

இதுபோன்ற ரத்த தானம் முகாம் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் வளர்க்கவும் நாட்டிலுள்ள பிற சமுதாயங்களோடு ஒன்றிணைக்கவும் உதவும் என்றார் அவர். தேசிய ரத்த வங்கியில் ரத்தப் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த முகாமில் தேசிய ரத்த வங்கியின் மருத்துவர்கள் நடிரா, இஸ்வானி மற்றும் ஃபய்ஸ் ஆகியோருடன் முப்பது பணியாளர்களுடன் 30 ஸ்குவாட்ஸ் செயலவை உறுப்பினர்கள், செராஸ்‌ செலாத்தான் ஈயோனின் மேலாளர் திருமதி நளினி, காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங், சமூகநல தன்னார்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles