ஷம்ரி வினோத் – பிர்டாவூஸை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவிட்டால்பிபிபி கட்சி தெருவில் இறங்கி போராடும்! டத்தோ டாக்டர் லோகபாலா அறிவிப்பு

கோலாலம்பூர் மார்ச் 8-
நாட்டில் இனங்கள் இடையே அச்சத்தையும் கலவரத்தையும் தூண்டும் வகையில் பேசிக் கொண்டிருக்கும் ஷம்ரி வினோத் – பிர்டாவூஸ் வோங் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.

நீதிமன்றத்தில் நிறுத்தி இவர்கள் மீதான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவர்கள் இருவரும் எல்லை மீறி போய்விட்டனர்.

சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொண்டு இருவரும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களால் நாட்டின் பொது அமைதிக்கு ஆபத்து. காவல் துறை உடனடியாக இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட வேண்டும்.

பல்லின மக்கள் வாழும் மலேசிய திருநாட்டில் இவர்கள் கலவரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

செகு சந்திரா என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கோவில் ஹராம் என்று கூறிக் கொண்டு இவர்கள் சட்டத்தை கையில் எடுத்து கொண்டு எல்லை மீறி போய்விட்டனர்.

இவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் பிபிபி கட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கி அதிரடியாக போராடும் என்று அவர் சொன்னார்.

இனியும் பொறுத்துக கொள்ள முடியாது. எங்களுடன் இணைந்து போராட வருபவர்கள் தாராளமாக வரலாம்.

எனது ஊர் புக்கிட் மெர்தாஜம். புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையில் பிறந்தேன் என்று அவர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற பிபிபி கட்சியின் உச்சமன்ற கூட்டத்தில் பிபிபி கட்சியின் புதிய உதவித் தலைவர்களாக டத்தோ இண்டர்ஜிட் சிங், டத்தோ முகமட் நோவாவும் புதிய தலைமை செயலாளராக டத்தோ சந்திரசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் பிபிபி கட்சியின் துணைத் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, உதவி தலைவர் டத்தோ இளையப்பன், தகவல் தொடர்பு துறை ஸ்டீபன், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles