நோன்பு பெருநாளை முன்னிட்டுஎஹ்சான் குழுமத்தின் சார்பில் காஜாங்கில் 500 குடும்பங்களுக்கு அன்பளிப்பு

மா.பவளச்செல்வன்

காஜாங், மார்ச் 8-
வசதிக் குறைந்த மக்களுக்கு உதவுவதை
எஹ்சான் குழுமம் கடமையாக கொண்டுள்ளது என்று
எஹ்சான் வர்த்தக குழுமத்தின்  நிறுவனர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் தெரிவித்தார்.

ரமலானை முன்னிட்டு எஹ்சான் குழுமம் காஜாங்கில் 500 பேருக்கு பெருநாள் அன்பளிப்புகளை வழங்கியது.

இந்நிகழ்வு மஸ்ஜித் இந்தியா காஜாங்கில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

பெருநாள் காலத்தின் வசதிக் குறைந்த மக்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கு உதவிகளை எஹ்சான் குழுமம் வழங்கி வருகிறது.

இவ்வாண்டு நாட்டில் பல பகுதிகளில் மொத்தமாக 5,000 அன்பளிப்புகளை ஏசான் குழுமம் வழங்கி வருகிறது.

அவ்வகையில் மஸ்ஜித் இந்தியா காஜாங்கில் 500 பேருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

அதே வேளையில் நோன்பு திறப்பு நிகழ்வில் 1,000த்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
நோன்பு காலத்தில் மட்டும் எஹ்சான் குழுமம் மக்களுக்கு உதவுவதில்லை. ஒவ்வொரு மாதமும் இந்த உதவிகள் தொடர்கிறது.

குறிப்பாக வசதிக் குறைந்த மக்களுக்கு உதவுவதை எஹ்சான் குழுமம் கடமையாக கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

முன்னதாக மாஹ்சா பல்கலைக்கழகத்தின் தலைவரும் வேந்தருமான டான்ஸ்ரீ ஹாஜி முகமத் ஹனிபா இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles