திரிசூலத்தை அவமதிப்பு செய்த தமீம் டஹாரி மீது நடவடிக்கை எடுங்கள்!சிலாங்கூர் கெஅடிலான் உதவித் தலைவர் இராஜன் வேண்டுகோள்

கோலாலம்பூர் மார்ச் 10-
இந்துக்களின் புனிதச் சின்னமான திரிசூலத்தை வேண்டுமென்றே மிதித்து சேதப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்ட தமீம் தஹ்ரி என்ற நபரின் செயல்களை நான் தீவிரமாகவும் கடுமையாகவும் கண்டிக்கிறேன்.

இது இந்து சமூகத்தின் நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை அவமதிக்கும் செயலை தெளிவாக நிரூபிக்கிறது.

இதுபோன்ற செயல் இந்துக்களின் இதயங்களை புண்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த நாட்டில் பன்முக சமூகத்தின் நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய பொறுப்பற்ற செயலாகும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் இராஜன் முனுசாமி தெரிவித்தார்.

இந்து வழிபாட்டுத் தலங்களை ஒழிக்கும் போராட்டத்தில் மக்களிடையே பிற மதங்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் திறன் கொண்ட ஒரு நாடகத்தின் மற்றொரு அத்தியாயம் இது.

இது சம்பந்தமாக, அரச மலேசிய காவல்துறை மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகள், இந்த விஷயத்தில் உடனடி, வெளிப்படையான மற்றும் உறுதியான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய மத அவமதிப்பு மற்றும் ஆத்திரமூட்டல் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டால் சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்
கொள்கிறேன்.

அதேசமயம் இந்த மலேசியர்கள் ஒற்றுமையை கருதி அமைதியை காக்க வேண்டும்.

யாரும் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

பல்லின மக்கள் வாழும் மலேசிய தொடர்ந்து அமைதி பூங்காவாக விளங்க இதான் நடைபெறும் ஒற்றுமையை பேண வேண்டும்.

நாட்டின் பொது அமைதிக்கு சீர்குலைக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles