
வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப், நிருபர்களிடம் கூறியதாவது:
அமெரிக்க ராணுவம் ஈரானை ஏறக்குறைய அழித்துவிட்டது. அது ஒரு கடினமான நாடு. அவர்களின் விமானப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அவர்களிடம் ரேடார் வசதி, விமான எதிர்ப்பு தளவாடங்கள் இல்லை. அவர்களிடம் இப்போது எதுவுமே இல்லை. இன்று சர்வதேச எரிசக்தி முகமை ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகின் பல்வேறு நாடுகளின் பெட்ரோலிய கிடங்குகளிலிருந்து, இதுவரை இல்லாத அளவாக 400 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விடுவிப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த, ‘ஆபரே ஷன் எபிக் ப்யூரி’ எனும் பெயரில் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொண்டோம்.
மிகவும் கொடூரமான சில மனிதர்களை ஒழித்து கட்டுவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இது, 47 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எங்களது தாக்குதலை அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

