
சென்னை: திமுக- மதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், 3 தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மட்டும் தனிச்சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது.
அதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவும் இன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, தமிழ்நாட்டில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும், அதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

