


காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மார்ச் 23
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மார்ச் 21 ஆம் தேதி பத்துகேவ்ஸ் ஷாங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் குடும்ப தின விழா நடைபெற்றது.
ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் சிறப்பு வருகை தந்து விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், புத்ரி டத்தோ சிவம், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குனர் சுரேந்திரன் கந்தா, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், மலேசிய நகரத்தார் சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன், குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ், துவான் எஎஸ்பி இராஜன், மைக்கி துணை தலைவர் டத்தோ டாக்டர் குமாரராஜா, பிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், டாக்டர் பி.எஸ். பிள்ளை, டாக்டர் உதயகுமார், டிஎன்பி சுந்திரசேகரன், முண்டககண்ணி ஆலயத் தலைவர் டாக்டர் கனக சுந்தரம், டாக்டர் தமிழ் செல்வி, யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், மீனாட்சி சுந்தரம், ஜீவா, ராஜா காளிமுத்து, மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜோர்ஜ், ராஜா காளிமுத்து, பிரதமர் துறையின் பத்திரிகை அதிகாரி உஷா ராணி, சகோதரி தர்ஷினி, புளூஸ் பிரதர்ஸ் சமுகநல இயக்கம் இளைஞர் அணி தலைவர் டத்தோ டாக்டர் சங்கர், டத்தோ மலர்விழி குணசீலன், ம இகா விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட், டத்தோ டி மோகன் தம்பதியர், உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.


மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தமது உரையில் இந்த விழா வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்
கடந்த 13 மாதங்களில் தாபோங் காசே ஹவானா திட்டத்தின் கீழ் மொத்தம் சங்கத்தின் 110 உறுப்பினர்களுக்கு தலா 3 ஆயிரம் வெள்ளி நிதியுதவி கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.



இந்த நிதி கிடைக்க உதவிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில், துணை அமைச்சர் தியோ நிங் சி, பெர்னாமா தலைமை நிர்வாக செயலாளர் டத்தின் படுக்கா நூருல் ஆகியோருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் சங்கத்தின் வளர்ச்சிக்கு பக்கப் பலமாக இருக்கும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, விலாயா மாநில அமைச்சர் ஹன்னா இயோ, வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடல் பாடல் இன்னிசை விழாவுடன் நடைபெற்ற இந்த விழாவில் அதிர்ஷ்ட குலுக்கலில் குளிர் சாதன பெட்டி முதல் பாரிசை தமிழ் நேசன் யூடியூப் சேனல் ஆசிரியர் சிவா தட்டிச் சென்றார்.

