
பினாங்கு மார்ச் 24-
கோவிலுக்கு இடைஞ்சல் இல்லாமல் புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை 8 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக பேஸ்புக்கில் புரளியை ஏற்படுத்திய நபருக்கு எதிராக இன்று போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை அமைச்சர் ஸ்டீபன் சிம் மின் சிறப்பு அதிகாரி லிம் இன்று போலீஸ் புகார் அளித்தார்.
அமைச்சர் ஸ்டீபன் சிம் தொடர்பு படுத்தி அந்த அவதூறு செய்தி பரப்பப்பட்டது.
இதை புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை வாரியம் முற்றாக மறுத்தது.
இனங்கள் மற்றும் மதங்கள் இடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்த செயல் அமைந்துள்ளது என்பதால் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

